நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக வலம் வந்தவர் அமலாபால். இயக்குனர் விஜய் உடனான திருமணம், அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் முறிவு என பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அமலாபால். தனது காதலராக ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த அமலாபால் தொடர்ச்சியாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார். தற்போது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியமான, யோகாசனத்தில் ஒரு பிரிவான மலாசனா என்கிற யோகாசனத்தை தொடர்ந்து செய்து வருகிறார் அமலாபால்.
இதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமலாபால், ‛‛இந்த ஆசனம் இடுப்பு பகுதியை பலமாக வைத்திருக்க உதவுகிறது என்றும், அதே சமயம் இந்த ஆசனத்தை செய்ய விரும்புபவர்கள் தங்களது மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு செய்வது நல்லது'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.