நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லொல்லு சபா ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து காமெடி கலந்த பேய் படமாக வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாக வெளியானது. சமீபத்தில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என பெயரில் வெளியானது. இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் சந்தானம் கூறியதாவது, "டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தை ஆர்யா தயாரிக்கின்றார்" என மேடையில் அறிவித்துள்ளார்.