சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

செய்தி வாசிப்பாளராக இருந்து, டிவி தொடரில் கதாநாயகியாக நுழைந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவருக்கும் அவருடன் படித்த ராஜவேல் என்பவருக்கும் ஏற்கெனவே காதல் என்பது தெரிந்த ஒன்றுதான். எப்போதாவது காதலருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிடுவார் பிரியா. இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் காதலைப் பற்றிய அன்பான பதிவுடன் வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார்.
“ஆக, இவர்தான் அவர்… எனது சிறந்த நண்பர், நாங்கள் சிரிப்போம், சண்டை போடுவோம், அழுவோம். தவறான வரிகளை நம்பிக்கையுடன் அவர் சத்தமாகப் பாடுவார். எங்களுக்குள் ஏ முதல் இசட் வரை வேறுபாடு உண்டு, ஆனாலும் அவர் என்னை நிறைவு செய்வார். நாங்கள் பொருத்தமற்றவர்கள் என்றாலும் எனக்குள் எப்போதும் அன்பாகவும், கலகலப்பாகவும், எளிமையாகவும் இருப்பார். அவருடன் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும், அதே சமயம் அமைதியாக அமர்ந்து, அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து எனது வலிகளைப் பற்றிப் பேசுவேன். இந்த வாழ்க்கையை கோடி மடங்கு ஆனந்தமாகக் கடக்க இவர் மட்டும் போதும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




