மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகின் சக இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான்
மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயம் உங்களுடன் இருக்கிறது.
அனிருத்
அதிர்ச்சியும் சோகமும்… குடும்பத்தாருக்கும், நண்பர்களும் இதயப்பூர்மான இரங்கல்.
தமன்
இது அதிர்ச்சியானது. இளையராஜா சார் குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கட்டும். அன்பான பவதாரிணி சீக்கிரமே மறைந்துவிட்டீர்கள். இதயம் கடினமாக உள்ளது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
இமான்
பவதாரிணி மேடம் திடீர் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். சீக்கிரமே மறைந்துவிட்டார். அவரது ஆன்மா அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கல்.
சந்தோஷ் நாராயணன்
மிகவும் சோகமான இழப்பு. மிகவும் திறமையும், மென்மையாகவும் பேசக் கூடிய பவதாரிணி மேடம் பல நினைவுகளை நமக்கு பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். ராஜா சார் மற்றும் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும், அனுதாபங்களும்.
ஜஸ்டின் பிரபாகரன்
செய்தி பற்றி கேள்விப்பட்டதும் ஆழ்ந்த துயரமாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.