நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒரு காலத்தில் திரைப்படத் தயாரிப்பு என்றாலே தென்னக மாநிலங்களைப் பொறுத்தவரையில் சென்னை தான் மையமாக இருந்தது. அதன்பின் ஒவ்வொரு மொழியாக அவரவர் மாநிலங்களில் செயல்பட ஆரம்பித்தனர். இப்போது ஒரு மொழியில் வெளியாகும் பான் இந்தியா படங்களையும், டப்பிங் படங்களையும் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள், வினியோக நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழிலும் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு வருகின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு கடந்த வருடம் விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த பிறகுதான் பல தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் தமிழிலும் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகியுள்ளதாகத் தெரிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கப் போகிறதாம். இதற்காக சென்னையில் புதிய அலுவலகம் ஒன்றையும் கடந்த வாரம் திறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரிக்க உள்ளார்களாம்.
அடுத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்த டிவிவி தனய்யா தமிழில் படம் தயாரிக்க முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறாராம். விஜய்யை வைத்து படம் தயாரிக்க அவர் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தரத் தயாராக இருக்கிறார்களாம்.
தனுஷ் அடுத்து நடிக்க உள்ள அவரது 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்து வரும் சூழலில் தெலுங்கு நிறுவனங்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும் எனத் தெரிகிறது.