ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தாங்கள் பிசியான நட்சத்திரங்களாக இருக்கும் நிலையில் தங்களது இளைய சகோதர, சகோதரிகளின் திருமணத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். நடிகர்களில் சிம்பு, அதர்வா ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். தற்போது அதேபாணியில் நடிகை சாய்பல்லவியின் இளைய சகோதரியான பூஜா கண்ணன் திருமண நிகழ்வில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். இவருக்கும் இவரது நீண்ட நாள் நண்பரான வினீத் என்பவருக்கும் இரு குடும்பத்தினராலும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிச்சயதார்த்த விழா சாய்பல்லவியின் வீட்டில் விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசைக்கப்பட்ட ஒரு நாட்டுப்புற பாடலுக்கு அங்கிருந்த உறவினர்களுடன் சாய்பல்லவி சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். அதிரடி நடனத்திற்காக அறியப்பட்ட சாய்பல்லவி இந்த நிகழ்வில் அழகியலுடன் கூடிய குரூப் நடனம் ஆடியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.