நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி டியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் படம் என்பதால் பெரிய பொருட்செலவில் கடந்த பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கங்குவா படத்தின் இறுதி காட்சியில் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கும் விதமாக பிரபல இளம் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.