நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வாரத்தில் திரைக்கு வந்த திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் இதுவரை தமிழகத்தில் ரூ.35 கோடிக்கு மேல், கேரளாவில் ரூ.4 கோடி, கர்நாடகாவில் ரூ.5 கோடி, வட இந்தியாவில் ரூ.3.5 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.15 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் ரூ.75 கோடி வசூலை உலகளவில் நெருங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.