நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் மித்ரன் ஆர்.ஜவஹர். கடைசியாக இவர்கள் கூட்டணியில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பின் மித்ரன்.ஆர்.ஜவஹர், நடிகர் மாதவனை வைத்து ஒரு புதிய படம் ஒன்றை கடந்த சில மாதங்களாக இயக்கி வருகிறார். இதன் கதையை மாதவனே எழுதியுள்ளார். இதில் கதாநாயகியாக ஷர்மிளா மன்திரி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'அதிர்ஷ்டசாலி' என தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்பு பெரும்பாலும் ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்றது. இதில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை மாதவன் நடித்து முடித்துள்ளார் என்கிறார்கள்.