நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வந்துள்ளது. அடுத்து தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியதாக இன்று(ஜன., 18) படக்குழு அறிவித்துள்ளனர். இதற்காக தனுஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஐதராபாத்திற்கு சென்றார்.