இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
“நேரம், பிரேமம், கோல்டு” என மூன்று மலையாளப் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். “நேரம்” படம் தமிழிலும் தயாரான படம். 'பிரேமம்' மலையாளப் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த படம். 'கோல்டு' படம் மலையாளத்திலேயே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அல்போன்ஸ் புத்ரன் தற்போது 'கிப்ட்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பவர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் கூட இனி படங்களை இயக்கப் போவதில்லை என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் விஜயகாந்த் மறைவு பற்றியும், முதல்வர், உதயநிதி உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தல் என சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இனி சமூக வலைத்தளங்களில் எந்தப் பதிவையும் இடப்போவதில்லை என அறிவித்துள்ளார். “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது எனது அம்மா, அப்பா, சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களை பயமுறுத்துவதால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால், அப்படியே செய்ய உள்ளேன், நிறைய பேருக்கு நல்லது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.