500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
சமீபத்தில் வெளியான சலார் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தெலுங்கில் மட்டுமல்ல தற்போது தனது சொந்த மொழியான மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்திலும் ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தை இயக்கிய விபின் தாஸ் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த மின்னல் முரளி பட இயக்குனர் பசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்கிறார். இது தவிர நடிகர் யோகிபாபு இந்த படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.