நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் தேதி திரைக்கு வந்த படம் அயலான். இந்த படத்தை இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி உள்ளார். ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஏலியனை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கூட குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் உலக அளவில் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.