Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்கு உயிர் கொடுத்தவர் விஜயகாந்த் : நினைவிடத்தில் நமீதா உருக்கம் | இந்த ஆண்டும் சாதனை மாணவர்களை சந்திக்கிறார் விஜய் | யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிருஷ்டிக்கு திருஷ்டி : பொங்கல் பேட்டி

15 ஜன, 2024 - 03:12 IST
எழுத்தின் அளவு:
Srishti-to-Drishti:-Pongal-interview

புத்தம் புது காலை... பொன்னிற வேளை... என்ற ஒரே ரீமேக் பாடல் மூலம் தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் சிருஷ்டி டாங்கே. காதலாகி படத்தில் அறிமுகமாகி, யுத்தம் செய், டார்லிங் என பல படங்களில் நடித்தாலும் கூட அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த படம் புத்தம் புது காலை பாடல் இடம் பெற்ற 'மேகா' படம் தான். எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, தர்மதுரை, வருச நாடு, கட்டில், சந்திரமுகி 2 படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளார்.

தினமலர் பொங்கல் மலருக்காக இவருடன் பேசியதிலிருந்து...

சொந்த ஊர் புனே. அங்கு படிப்பை முடித்தேன். ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியிருந்தாலும் ஒளிப்பதிவாளர் ரவிசங்கரன் மூலம் மேகா படத்தில் நாயகி வாய்ப்பு கிட்டியது. பழைய பாடல்களை ரீமேக் செய்து வெளியான காலகட்டம் அது. மேகா படத்தில் இடம் பெற்ற 'புத்தம் புது காலை, பொன்னிற வேளை...' பாடல் இந்தளவுக்கு ஹிட் ஆகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அது எனக்கு அடையாளத்தை தந்து கொண்டிருக்கிறது.

முதல் முறையாக கேமிரா முன் நின்றதை வாழ்வின் முக்கிய தருணமாக உணருகிறேன். அனைவருக்கும் பிடித்த நடிகையாக உயர வேண்டும் என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது. ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி எடுத்து கொள்வது உண்மை தான். நல்ல கதாபாத்திரங்களுக்காக சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எண்ணிக்கை அதிகம் இருப்பதை காட்டிலும் தரமான படங்களாக இருக்க வேண்டும் என்பதில் உஷாராக
இருக்கிறேன்.

நடிப்பை பொறுத்த வரையில் மக்கள் பாராட்டும் வகையில் இருந்தால் போதும். பெரிய ஹீரோக்களுக்கு
ஜோடியாக நடிப்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடிப்பதும் மிக முக்கியம். சமீபத்தில் வெளியான கட்டில் படம் வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமளிக்கிறது. அந்த படத்தில் கர்ப்பிணியாக நடிக்க முதலில் தயக்கம் இருந்தது. படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கதை சொன்ன விதம் பிடித்திருந்தது.

இந்த படத்தை பார்த்து அப்பா என்னை போனில் அழைத்து வாழ்த்தியதை மறக்க முடியாது. இப்படத்தில் நடிக்கும் போது தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து தெரிந்து கொண்டேன். இப்போது தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். தற்போது தமிழையும் கற்க துவங்கியுள்ளேன். அடுத்த படத்தில் சொந்த குரலில் தமிழில் பேசி நடிப்பேன்.
அந்தளவுக்கு தமிழ் இனிமையான மொழி. பொங்கல் பண்டிகையை தமிழக தோழிகளுடன் இணைந்து கொண்டாடுவது உண்டு.

பிடித்த நடிகை நயன்தாரா. நடிகர் தனுஷ். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் உண்டு. நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள். தலைவர்களாக பார்க்காதீர்கள் என ரசிகர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என கன்னக்குழி பெரிதாகுமளவு சிரித்து கொண்டே பேட்டியை முடித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழர் கூடிக் கொண்டாடும் நாள்... 'பொங்கலோ பொங்கல்' : சினிமா பிரபலங்களின் வாழ்த்துதமிழர் கூடிக் கொண்டாடும் நாள்... ... ஒழுக்கம், நேர்மை இருந்தால் நிம்மதியான வாழ்க்கை : ரஜினி வாழ்த்து ஒழுக்கம், நேர்மை இருந்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in