மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழர்களின் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயற்கையையும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளையும் வணங்கிக் கொண்டாடும் ஒரு விழாவாக தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு பங்காக இந்த பண்டிகை இருக்கிறது.
இன்றைய பொங்கல் நன்னாளில் பல சினிமா பிரபலங்களும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பல படங்களின் புதுப்புது அப்டேட்டுகளும் வெளியாகி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன்
இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நடிகர் சிவகார்த்திகேயன்
இந்த முறை எங்களுக்கு அயலான் பொங்கல். அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்…
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்
பொங்கலோ பொங்கல்
இயக்குனர் மாரி செல்வராஜ்
அனைத்து அன்பிற்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
இயக்குனர் சேரன்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த பொங்கல் நன்னாளில் குடும்பத்தோடும் எங்களோடும் கொண்டாடுங்கள்.
பார்த்திபன்
இன்பம் பொங்க(ல்) வாழ்த்துகள்
நடிகர் ஹரிஷ் கல்யாண்
உள்ளத்தில் உற்சாகம் பொங்க, வாழ்க்கையில் அனைத்து வளங்கள் வளர, அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
தமிழர் திருநாளாம் தை திருநாள் வாழ்த்துகள்
நடிகர் மாதவன்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த அறுவடைக் காலம், உங்களுக்குத் தகுதியான அனைத்து அன்பு அதிர்ஷ்டத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் மேலும் பலவற்றையும் தரட்டும்.
நடிகர் கார்த்தி
தங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் உழவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களுக்கும், எம் தமிழ் மக்களுக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.