ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ரத்னம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஷால் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விஷாலை வரவேற்கும் இயக்குனர் ஹரி, ஸ்டண்ட் மாஸ்டர் உங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். என்ன என்று போய் கேளுங்கள் என சொல்லி அனுப்புகிறார்.
இதையடுத்து விஷால் பைட் மாஸ்டர் கனல் கண்ணனை போய் பார்க்கும் போது, ஒரே ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சியை எடுக்க போகிறோம் என்று கூறுகிறார். அதற்கு ஒரு ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சியா? என்று அவர் கேட்கும்போது, சண்டை காட்சி மட்டும் அல்ல சேஸிங் காட்சியும் உண்டு என்று கூறுகிறார். அதைக்கேட்டு ஆச்சர்யத்துடன் செல்கிறார் விஷால். அப்போது கனல்கண்ணன் 24 வருஷமா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே என்று கூறிக் கொண்டு நிற்கிறார். இப்படி இந்த ரத்னம் படத்தில் ஒரு காட்சி இடம் பெறுவதை இந்த வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.