Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இன்று நடந்த 'தெறி' ஹிந்தி ரீமேக் பூஜை

14 ஜன, 2024 - 05:30 IST
எழுத்தின் அளவு:
theri-hindi-remake-pooja-ceremony

அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'தெறி'. இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் போவதாக கடந்த சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இன்று படத்தின் பூஜையை நடத்தி அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார்கள்.

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். காளீஸ்வரன் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனைவரும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டனர். படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் 'ரகு தாத்தா' டீசரில் 'ஹிந்தி தெரியாது போய்யா' என்று வசனம் பேசியிருந்தார். இன்று ஹிந்திப் படத்தில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் பூஜை நடந்துள்ளது. அங்கு சென்று ஹிந்தி தெரியாது என சொல்ல மாட்டார், ஹிந்தியில்தான் பேசியிருப்பார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பில்கிஸ் பானு கதையை படமாக்க நான் தயார் : கங்கனா அறிவிப்புபில்கிஸ் பானு கதையை படமாக்க நான் ... விமான நிலைய மேம்பாலத்தில் இரண்டு மணி நேரம் சிறைப்பட்ட ராதிகா ஆப்தே விமான நிலைய மேம்பாலத்தில் இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)