ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"வெள்ளாவி புகழ், டாப்சி, "சாஸ்மே பதூர் என்ற படத்தின் மூலம், முதல் முறையாக, பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். தென் மாநில மொழிப் படங்களிலிருந்து, இந்திக்கு போன, ஸ்ரீதேவி, அசின் வரிசையில், தானும், இடம் பிடித்து விட வேண்டும் என, ஆசைப்படுகிறார், டாப்சி. "சாஸ்மே பதூர் படம், கடந்த வாரம் தான், வெளியானது. வட மாநிலங்களில், பரவலாக இந்த படத்துக்கு, ஓரளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும், "படம் ஹிட்டடிக்குமா அல்லது கவிழ்த்து விடுமா என, தெரிவதற்கு, இன்னும் சில நாட்களாகும் என்பதால், டாப்சிக்கு, கடந்த சில நாட்களாக, ஒரே படபடப்பும், நடுக்கமுமாக இருக்கிறதாம். ஆனாலும், தன் நடுக்கத்தை வெளியில் காட்டாமல், இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, விமானத்தில் துபாய் சென்றாராம். இந்த படத்தில், சித்தார்த்தும் நடித்திருப்பதால், இரண்டு பேரும் சேர்ந்து தான், துபாய் சென்றார்களாம்.