இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான அமீர்கானின் மகள் ஈராகான், நூபுர ஷிகாரே ஆகியோருக்கு கடந்த ஜனவரி 3ம் தேதி மும்பையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் அவர்களது குடும்பத்தார் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அதோடு, ஈராகானை திருமணம் செய்து கொண்ட நூபுர், உடற்பயிற்சி ஆசிரியர் என்பதால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு அதே முண்டா பணியன், அரைக்கால் டவுசரோடு திருமணத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் அமீர்கான் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜனவரி 13ம் தேதி நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது பாலிவுட் திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் சூர்யாவும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். கருப்பு நிற ஆடை அணிந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.