சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
தற்போது தமிழில் இந்தியன்- 2, விடாமுயற்சி, வேட்டையன், எல்ஐசி உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அதோடு தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே என்ட்ரி கொடுத்துவிட்ட அனிருத், ஹிந்தி சினிமாவில் கடந்தாண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது பிரித்விராஜ் இயக்கி நடிக்கும் ‛டைசன்' என்ற படத்தின் மூலம் தற்போது மலையாளத்திலும் என்ட்ரி கொடுக்கப் போகிறார் அனிருத். ஏற்கனவே லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட சில படங்களை இயக்கி இருக்கும் பிரித்விராஜ், இந்த டைசனை பான் இந்தியா படமாக இயக்குகிறார்.