நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் என இரு முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளிவந்த இப்படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் வெளியாகவில்லை. அங்கு தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் அதை காரணம் காட்டி மறைமுகமாக படத்திற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க இந்த படம் ரிலீஸில் சிக்கல் நிலவியது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வருகின்ற ஜனவரி 25ம் தேதி ஏசியன் சினிமாஸ், சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.