மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் முக்கியமானவர் நடிகை மாயா. இவர் விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட சில படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் மூலம் இன்னும் வெளிச்சம் பெற்றுள்ள மாயா இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் யானிக் பென் தமிழில் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் மாயா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஹாலிவுட்தில் டிரான்ஸ்போர்ட்டர் 3, இன்செப்ஷன் பாலிவுட்டில் ராயீஸ், டைகர் ஜிந்தா ஹை உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய யானிக் பென் சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் சமந்தாவின் யசோதா ஆகிய படங்களுக்கும் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.