நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' படம் இரண்டு பாகமாக தயராகி இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் நடித்திருந்தனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்திருந்தார். வரும் கோடை விடுமுறையில் 'விடுதலை-பார்ட் 2' படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விட்டாலும் கோடை விடுமுறையில் வெளியிட்டு வசூலை பார்க்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக வருகிற பிப்ரவரி 3ம் தேதி ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. இதேபோல வருகிற 31ம் தேதி முதல் பாகம் திரையிடப்படுகிறது. இரு பாகங்களும் 'லைம்லைட்' பிரிவின் கீழ் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் வெற்றிமாறன், எல்ரெட் குமார், விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.