நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் தெலுங்கு நடிகரான ஜுனியர் என்டிஆர். அந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்த ராம் சரணுக்கும் அப்படி ஒரு பிரபலம் கிடைத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் 'தேவரா' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு அவர்களது அடுத்த படங்களும் பான் இந்தியா அளவிலான அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம்.
ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள 'தேவரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று ஐந்து மொழிகளில் யு டியூபில் வெளியானது. அதற்குள் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் இருப்பதால் புதிய சாதனையைப் படைக்கவும் வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் தெலுங்குத் திரையுலகத்தில் 600 கோடி வசூல் கடந்த படமாக 'சலார்' படம் மட்டுமே அமைந்தது. தமிழில் 'ஜெயிலர், லியோ' ஆகிய படங்கள் அமைந்தன. இந்த வருடம் தெலுங்கில் சில படங்கள் அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 'தேவரா' படமும் ஒன்றாக இருக்கலாம்.