நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தற்போது பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ள கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தெலுங்கில் இணைந்து நடித்த போது காதலில் விழுந்ததாக கிசுகிசு பரவியது.
'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய இரண்டு படங்களிலும் அவர்களது காதல் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை. அந்த அளவுக்கு அன்யோன்யமாக நடித்திருந்தனர். அதைப் பார்த்ததுமே அவர்களுக்குள் காதல் என பேச ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் மாலத்தீவு டூர் கூட ரகசியமாக சென்று வந்தார்கள்.
அடிக்கடி அவர்களது காதல் பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகும். தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம், பின்னர் திருமணம் என வெளியிட்டு வருகிறார்கள்.
ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் தமிழில் 'வாரிசு', ஹிந்தியில் வசூலைக் குவித்த 'அனிமல்' ஆகிய படங்களில் நடித்தார். பிஸியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு திருமண செய்தி வர ஏதும் காரணமா அல்லது உண்மையிலேயே நடக்க உள்ளதா என்பது குறித்து விஜய், ராஷ்மிகா இருவரில் யாராவது ஒருவர் சொன்னால்தான் தெரிய வரும்.