நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்திய மொழிப் படங்களில் எந்த மொழி நடிகரின் டீசர், டிரைலர் புதுப் புது சாதனைகளைப் படைக்கிறது என்பதில் தமிழ், தெலுங்கு நடிகர்களுக்கு இடையில்தான் அதிக போட்டி நிலவுகிறது.
கடந்த 2023ம் வருடத்தில் வெளியான தமிழ்ப் படங்களில் விஜய்யின் 'வாரிசு, லியோ', டிரைலர்களும், அஜித்தின் 'துணிவு' டிரைலர்களும் 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தன. 'லியோ' டிரைலர் முந்தைய அதிக பட்ச சாதனைகளை முறியடித்து 24 மணி நேரத்தில் 31.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அதாவது 3 கோடியே 19 லட்சம் பார்வைகளை.
அந்த சாதனையை பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சலார்' டிரைலர் 3 கோடியே 25 லட்சம் பார்வைகளைப் பெற்று முறியடித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான மகேஷ் பாபு நடித்துள்ள தெலுங்குப் படமான 'குண்டூர் காரம்' டிரைலர் 24 மணி நேரத்தில் 39 மில்லியன், அதாவது 3 கோடியே 90 லட்சம் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளை என குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது 40 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது..
'குண்டூர் காரம்' டிரைலர் குறித்து ரசிகர்களிடம் சில அதிருப்திகள் இருந்தாலும் அதன் பார்வை இந்த அளவிற்கு கிடைத்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது. இத்தனைக்கும் படத்தை பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடாமல் தெலுங்கில் மட்டுமே வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் பிரபாஸை விடவும் அதிக ரசிகர்களை வைத்துள்ளவர் மகேஷ்பாபு தான் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.