ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரோஜாக்கூட்டம் படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதன்பிறகு நண்பன் வரை பல படங்களில் நடித்து விட்டார். சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகளாகி விட்டது. இந்த நிலையில், சமீபத்தில் மணிவண்ணன் இயக்கத்தில், உருவாகியுள்ள அமைதிப்படை -2 படமான நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தார். அப்போது, மணிவண்ணனை ரொம்ப நாட்களாக எனக்கு இயக்குனர் என்றே தெரியாது என்று தெரிவித்தார். நான் நடிக்க வந்த காலகட்டங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் அவரை ஒரு நடிகராக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், கரு.பழனியப்பன் படத்தில் நடித்து வந்தபோதுதான், அவர் ஒரு இயக்குனர் என்பது எனக்கு தெரியும் என்று சொன்னார் ஸ்ரீகாந்த்.
மேலும், அதையடுத்துதான் மணிவண்ணன் இயக்கிய சில படங்களைகூட பார்த்தாராம். சினிமாவுக்கு வந்து பல படங்களில் நடித்தபிறகும் அவர் ஒரு பெரிய இயக்குனர் என்பதை தான் தெரிந்துகொள்ளாமல் இருந்ததை நினைத்து வருத்தப்பட்டாராம். இப்படி மேடையில பேசிய ஸ்ரீகாந்த், சந்தடிசாக்கில், மணிவண்ணன் சார், என்னை மாதிரி நடிகர்களுக்கும் அவ்வப்போது சான்ஸ் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது பேச்சுக்கு யாரும் கைதட்டவில்லை என்றாலும், மேடையில் புடவை கட்டியபடி கவர்ச்சி காட்டிக்கொண்டிருந்த நமீதா மட்டும் பலமாக கைதட்டி ஸ்ரீகாந்தின் கவனத்தை ஈர்த்தார்.