நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

“தமிழ்ப் படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா” உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளவர் சசிகாந்த். அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'டெஸ்ட்'. இப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்புடன் அவருக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் நயன்தாரா. இது குறித்து, “எனக்கு அதிகமாகத் தேவைப்படும் போது எனது வாழ்வில் நீ வந்ததற்கு நன்றி… நீயாக இருப்பதை நான் மிஸ் செய்யப் போகிறேன்… 'குமுதா'வுக்காக நன்றி. இயக்குனர் சசிகாந்த்… குமுதாவின் பெரிய வலிமையாக இருந்ததற்கு நன்றி. மாதவன், சித்தார்த்... முன்னுதாரணமாக இருந்ததற்கு நன்றி. எங்கள் அன்பின் உழைப்பைக் காண நீங்கள் அனைவரும் காத்திருக்க முடியாது - டெஸ்ட்” என இப்படம் குறித்து உணர்வுபூர்வமாய் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.