ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அடுத்து அஜித்தின் 62வது படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் கதையில் ஏற்பட்ட பிரச்னையால் அந்த படத்திலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு எல்ஐசி, அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று அவர் டைட்டில் வைத்திருக்கிறார்.
ஆனால் இந்த டைட்டில் தனக்கு சொந்தமானது என்று ஏற்கனவே இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் கூறிவரும் நிலையில், தற்போது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி நிறுவனம் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், எல்ஐசி என்பது எங்களது நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட பெயராகும். அதனால் அதனை மற்றவர்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.
இது எங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நன்மதிப்பை கெடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அதனால் இந்த நோட்டீஸ் உங்களுக்கு கிடைத்த 7 நாட்களுக்குள் படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும். இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விக்னேஷ் சிவனுக்கு எல்ஐசி படத்தின் டைட்டிலை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்பது தெரியவந்துள்ளது.