ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் திரைப்படம் 'ரிபல்'. மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூணார் பகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து சமீபத்தில் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ கிடைத்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தை ஜனவரி 26ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இதே தேதியில் சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் வெளியாகிறது என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.