Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்ப்புக்காக சில நடிகைகள் படுக்கையை பகிர்வது உண்மைதான்! சொல்கிறார் சனா கான்

06 ஏப், 2013 - 15:23 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் வாய்ப்பு கிடைக்க, சில நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்வது உண்மை தான் என்று கூறியுள்ளார் நடிகை சனா கான். சிலம்பாட்டம், ஆயிரம் விளக்கு ‌போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சனா கான். இவர் இப்போது மலையாளத்தில் க்ளைமாக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் வெளியாகிறது. பிரபல மலையாள டைரக்டர் அனில் இப்படத்தை இயக்கியுள்ளார். சில்க் ஸ்மிதாவை சினிமாவுக்குள் அறிமுகம் செய்து வைத்து அவரது அந்தரங்க விஷயங்கள் உள்ளிட்ட அவரை பற்றி முழு விஷயமும் அறிந்த இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி தான் இப்படத்திற்கு கதை-வசனம் எழுதி உள்ளார்.

சென்னையில் நடந்த நடிகையின் டைரி படத்தின் ட்ரையிலர் வெளியீட்டு விழா முடிந்த கையோடு, நடிகை சனா கான் நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம், இயக்குனர் அனில் உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்னர். அப்பொழுது சனாகானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் ஆங்கிலத்தில் அளித்த பதில்களின் தமிழாக்கமும் வருமாறு...

* சில்க் நடித்த படங்களை பார்த்திருக்கிறீர்களா...?


ஆம், சிலவற்றை பார்த்திருக்கிறேன்... சிறந்த நடிகை அவர்.

* சில்க்கின் இறுதி முடிவு குறித்து...?


அது தற்கொலை என்றும், கொலை என்றும் பல கருத்துக்கள் இன்று வரை உலா வருகிறது. எதுவானாலும், ஒரு திறமையான நல்ல நடிகையை நாம் பல வருடங்களுக்கு முன்பே இழந்தது ஈடு செய்ய முடியாதது.

* இந்தப்படத்தின் ட்ரையிலரில் நடிகையாக திறமை மட்டும் போதாதா? அந்தப்படத்தோட புரடியூசர் கூட படுக்கவும் வேண்டுமா? என்று ஒரு டயலாக் வருகிறது. அதை பேசி நடித்தபோது ஒரு நடிகையாக உங்கள் மனநிலை...?


கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால்; நிஜத்தில் புரடியூசர்கள் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு ஹாய், பை சொல்வதோடு சரி... நான் பார்த்த வரையில் என்னிடமும் தயாரிப்பாளர்கள் அந்தளவிற்கே பழகி வருகின்றனர்.

* இதே சில்க் கதை இந்தியில் டர்ட்டி பிக்சராக வெளிவந்ததே? அதை பார்த்திருக்கிறீர்களா? அதில் வித்யாபாலனின் நடிப்பு எப்படி?


டர்ட்டி பிக்சர்ஸ் படம் பார்த்திருக்கிறேன். சூப்பர் பிலிம். வித்யாபாலன் அந்தப்படத்திற்காக தேசிய விருதே வாங்கினாரே!

* திரையுலகில் வாய்ப்புக்காக நடிகைகள், படுக்கையையும் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் இருப்பதாக கூறப்படுகிறதே, இதுப்பற்றி உங்கள் கருத்து?

அது உண்மைதான். ஒரு சில இடங்களில் அது மாதிரி இருக்கலாம். ஆனால், என் விஷயத்தில் அது மாதிரி முடியாது... நான் ரொம்பவும் ஸ்டெரயிட் பார்வேட் ஆன பொண்ணு.

* சில்க்கின் கேரக்டரில் நீங்கள் நடிப்பதால் அவரது ஆவி உங்களை பயமுறுத்த வாய்ப்பு இருக்கிறதே...?

நிச்சயமாக கிடையாது, என் நடிப்பை பார்த்துவிட்டு வெரிகுட், என் பெயருக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டாய் என்று சில்க் என்னை பாராட்டவே செய்வார்.

இப்படியாக வித்தியாசமும், விறுவிறுப்புமாக பதில் அளித்தார் நடிகையின் டைரி நாயகி சனா கான்!!

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப், 2013 - 15:38 Report Abuse
Angry ஜெய் அதான் எவனும் சினிமாக்காரனுக்கு வீடும் பெண்ணும் கொடுக்க மாட்டேன் என்கிறான்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
07 ஏப், 2013 - 18:35 Report Abuse
itashokkumar "ஒரு சில இடங்களில் அது மாதிரி இருக்கலாம். ஆனால், என் விஷயத்தில் அது மாதிரி முடியாது" ஒரு சில இடம் என்றால் எத்தனை சதவிகிதம் என்று சொல்ல முடியுமா? 25%? 50%? 75%?, 99%?
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
07 ஏப், 2013 - 18:34 Report Abuse
itashokkumar "ஸ்டெரயிட் பார்வேட்" அப்படின்னா என்னாங்கண்ணா?
Rate this:
Mariappan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 ஏப், 2013 - 11:00 Report Abuse
Mariappan உங்கள் பதில் வெரி குட் நீங்க எதிர் காலத்தில் நல்ல நடிகையாக வருவிங்க
Rate this:
vimal - Singapore  ( Posted via: Dinamalar Android App )
07 ஏப், 2013 - 08:54 Report Abuse
vimal This one 50% correct 50% wrong
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in