ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஷால் சொந்தமாக தயாரிக்கும் படத்திற்கு பாண்டிநாடு என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஹீரோயினாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மதகஜராஜா, பட்டத்து யானை படங்களில் நடித்து வரும் விஷால், அடுத்தப்படியாக சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து, நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள விஷால், தான் தயாரிக்கும் முதல்படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களின் டைரக்டர் சுசீந்திரன் இயக்குகிறார். மதுரையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட உள்ளது. இதனால் படத்திற்கு பாண்டிநாடு என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் ஹீரோயினாக லட்சுமி மேனனை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த வேளையில், இப்போது அவரே ஹீரோயினாக தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஷால் கூறுகையில், இருதினங்களுக்கு முன்னர் தான் லட்சுமி மேனனை தேர்வு செய்தோம். படத்தின் கதைக்களம் மதுரை என்பதால் அந்த சாயலில் ஹீரோயின் இருக்க வேண்டும் என எண்ணினோம். ஏற்கனவே சுந்தரபாண்டியனில், லட்சுமி மேனனுக்கு அந்த சாயல் பொருந்தியிருந்ததால் லட்சுமி மேனனை தேர்வு செய்தோம். மே 14 முதல் பாண்டிநாடு ஷூட்டிங் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.