நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அமீர்கான். இவருக்கு ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் என இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் (இருந்தனர்). ஆனால் இவர்கள் இருவரையுமே அமீர்கான் விவாகரத்து செய்துவிட்டார். ஆனாலும் இந்த இருவருடனும் நட்பாகவே பழகி அவர்களுடன் ஒன்றாகவே பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். இதில் அமீர்கான் - ரீனா தத்தா தம்பதியின் மகளான இரா கானுக்கும், நூபுர் சகாரா என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (ஜன.,3) இவர்களது பதிவு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமீர்கான் மற்றும் மணமகன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரும் ஜன.,5ம் தேதி (நாளை) உதய்ப்பூரில் இவர்களது திருமண நிகழ்வு விமரிசையாக நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து மும்பையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார் அமீர்கான். இந்த பதிவு திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.