ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சமீபத்தில் 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' அதாவது சுருக்கமாக 'கோட்' என்கிற பெயர் வரும் விதமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதும் படத்தின் போஸ்டர்கள் மூலமும் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகிறார். கடந்த 22 வருடங்களுக்கு முன்பு வெளியான வசீகரா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டார் சினேகா.
அப்போது பேசிய சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா இதற்கு முன்னதாக வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக நடிப்பதற்கு சினேகாவிற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சினேகா மறுத்துவிட்டார். அது நல்ல முடிவு என்று நான் அப்போதே பாராட்டினேன். அப்போது அந்த முடிவை எடுத்ததால் தான் இப்போது விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.