நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

எதிர்நீச்சல் தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தொடரில் வரும் அனைத்து நடிகர்களுமே ஏதாவது ஒருவாரத்தில் சிறப்பாக பெர்பார்மன்ஸ் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். அந்த வரிசையில் ஆதிகுணசேகரனின் மகனாக தர்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திக் ராகவேந்திராவுக்கும் எதிர்நீச்சல் தொடர் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான சின்னத்திரையின் வளரும் நடிகருக்கான விருது ரித்திக் ராகவேந்திராவுக்கு கிடைத்துள்ளது. ‛லா பேஷன் ஈவண்ட்' நடத்திய 'ப்ரைட் ஆப் தி இயர்' சீசன் 2 நிகழ்வில் ரித்திக் ராகவேந்திராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வாங்கும் போது எதிர்நீச்சல் பிரபலங்களான கமலேஷ், காயத்ரி ஆகியோர் உடனிருந்து ரித்திக்கை வாழ்த்தியுள்ளனர். மேலும் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் ரித்திக்கிற்கு திரையுலகில் சிறப்பான எதிர்காலம் அமையும் என வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.