ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மணிசர்மா… இந்தப் பெயர் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். ஆனால், விஜய் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்த படங்களான 'ஷாஜகான், யூத், போக்கிரி,' ஆகிய படங்களின் இசையமைப்பாளர் என்று சொன்னால் தெரிந்து கொள்வார்கள். அந்தப் படங்களின் பாடல்கள் அப்போது பெரும் வரவேற்பை பெற்றவை. இப்போதும் அந்தப் பாடல்கள் பலரது பிளே லிஸ்ட்டில் இருக்கும்.
அந்தப் படங்கள் மட்டுமல்லாது தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண் ஆகியோரின் சில பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். குறிப்பாக மகேஷ் பாபு நடித்த சூப்பர் ஹிட் படமான 'ஒக்கடு', பவன் கல்யாண் நடித்த சூப்பர் ஹிட் படமான 'குஷி' படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
2021ல் சுமார் 10 தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்த மணிசர்மாவுக்கு கடந்த மூன்று வருடங்களாக அதிக வாய்ப்புகள் வரவில்லை. தற்போது இரண்டு தெலுங்கு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கும் இசையமைக்க வாய்ப்பு தருமாறு ஓபன் ஆகப் பேசியுள்ளார்.
“மகேஷ் பாபு, பவன் கல்யாண் என அனைவரின் படங்களில் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர்களின் ஒவ்வொரு படத்திலும் நான் இசையமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு வாய்ப்பு கொடுத்து, இன்னொரு படத்திற்கு தமனுக்கு வாய்ப்பு கொடுத்து, அதற்கடுத்த படத்திற்கு எனக்கு வாய்ப்பு தரலாம். அல்லது அவர்களுக்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு கொடுத்து எனக்கும் ஒரு வாய்ப்பு தரலாம். இப்படி பிரித்துக் கொடுத்தால் வழக்கமான உணர்வு இல்லாமல் மாறுபட்ட உணர்வு ரசிகர்களுக்குக் கிடைக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
பல முக்கிய தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த மணி சர்மா இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அதுதான் உண்மையும் கூட. மணிசர்மாவை தனது குரு என்று சொல்பவர் இசையமைப்பாளர் தமன். அவருடன் எட்டு வருடங்கள் பணியாற்றியவர்.
மணிசர்மாவின் பேட்டிக்கு மகேஷ் பாபு, பவன் கல்யாண் என்ன பதிலளிக்கப் போகிறார்கள் என்பதை தெலுங்குத் திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.