விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இரண்டு கதாநாயகிகள், ஒரே படத்தில் நடித்தாலே வில்லங்கம் தான். தேவையில்லாத, "ஈகோ போர் வெடித்து, ஸ்பாட்டில் ஆளுக்கொரு பக்கமாக, முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பர். ஆனால், "கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த பிந்துமாதவி, ரெஜினா இருவரும், எந்தவித சர்ச்சையையும் உருவாக்காமல், ரொம்ப சகஜமாக பழகினார்களாம். ஸ்பாட்டில் அவர்கள் இருக்கிற இடம் கலகலப்பாக காட்சியளித்ததாம். ரெஜினா கூறுகையில், "பிந்து மாதவி என்னை விட பெரிய நடிகை. தெலுங்கில் அதிக படங்களில் நடித்தவர், இப்போது தமிழிலும், பிசியாக நடித்து வருகிறார் என்ற போதும், யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்க வேண்டும் என்றோ, சக நடிகைகளை போட்டியாகவோ, நினைக்காதவர். என்னிடம் மிகவும் அன்பாக பழகினார். அதனால், நல்ல தோழிகளாகி விட்டோம். அடிக்கடி போனில் பேசிக் கொள்வதோடு, நேரம் கிடைக்கும் போதும் நேரில் சந்தித்து கொள்கிறோம் என்கிறார் ரெஜினா.