நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையில் லோகேஷ் மீது ராஜூ முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛லியோ படத்தில் பெரும்பாலும் வன்முறை காட்சிகள் தான் அதிகம் உள்ளன. கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை லியோ படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.
லோகேஷ் பெரும்பாலும் வன்முறை, போதைப்பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காட்டுகிறார். அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். லியோ படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லோகேஷ் தரப்பில் யாரும் ஆஜராகததால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.