நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்', தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' மற்றும் அருண் விஜய் நடிக்கும் 'மிஷன் 1'ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகை படமாக வருகிற 12ம் தேதி வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே தேதியில் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இரு மாநிலங்களிலும் இந்த இரண்டு தமிழ் படங்களுக்கும் தியேட்டர் ஒதுக்கித் தர மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரு மாநிலங்களிலும் மகரசங்கராந்தியை முன்னிட்டு மகேஷ் பாபு, ரவி தேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மற்றும் பிரசாந்த் வர்மா ஆகிய ஐந்து பெரிய நட்சத்திரங்களின் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் அந்த படங்களுக்குதான் முன்னுரிமை கொடுப்போம் என்கிறார்களாம். இதனால் பொங்கல் பண்டிகை முடிந்த இரண்டாவது வாரத்தில்தான் தமிழ் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கப்படும் என்கிறார்கள்.
கேரளா, கர்நாடகா வெளியீட்டில் மாற்றம் இல்லை என்கிறார்கள்.