நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜெய்பீம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேலுக்கு ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தை இயக்கும் வாய்ப்பு ஜாக் பாட் பரிசாக கிடைத்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் தவிர அவருடன் இதுவரை பெரும்பாலும் இணைந்த நடித்திராத மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். தூத்துக்குடி பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் மற்றும் பஹத் பாசில் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நடித்தபோது எடுக்கப்பட்ட ஓரிரு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லீக் ஆகின. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியது. இருந்தாலும் தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் ரஜினிகாந்த்தும் பஹத் பாசிலும் இணைந்து நடிக்கும் காட்சி ஒன்றின் சில நொடி வீடியோவே சோசியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது. இந்த வீடியோவில் பஹத் பாசில் ஒரு ஓரமாக நிற்க ரஜினிகாந்த் நடந்து வந்து தனக்கு எதிரில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் பேசுவது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது.