விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் நேற்று (டிச.,30) மாலை 4 மணிக்கு காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், எழுத்தாளர், மேடை நாடக ஆசிரியர், இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முக திறமை படைத்தவர் லியோ பிரபு. 1933ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர், பள்ளி நாட்களிலே சினிமா மற்றும் நாடகம் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். பழம் பெரும் நடிகர் சகஸ்ரநாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் நாடக குழுவில் சேர்ந்து, நடிப்பு கலையை பயின்றார். 13 நாடகங்களை சொந்தமாக எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கவும் செய்திருக்கிறார் லியோ பிரபு.
மேலும் நான் மகான் அல்ல, பருவ காலம், புதிர், பேர் சொல்லும் பிள்ளை, இரண்டும் இரண்டும் அஞ்சு, இது எங்க நாடு, அண்ணே அண்ணே போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் பாலன் கே நாயரின், ஈநாடு படத்தில் ஏற்று நடித்த வேடத்தில், தமிழில் இது எங்க நாடு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். 1990ம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு தமிழக அரசின் மிக உயர்ந்த மாநில விருதான கலை மாமணி விருதை வழங்கியது. மேடை நாடகம், எழுத்து, திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரு லியோ பிரபு அவர்கள் சிறந்த ஊடகவியலாளராகவும், புனைவு எழுத்தாளராகவும், புதினங்கள் மற்றும் நாவல் ஆசிரியர் ஆகவும் அறியப்பட்டவர். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும் இயக்கவும் செய்திருக்கிறார்.
வயது மூப்பு காரணமாக தன்னுடைய மனைவி உஷா, மகள் முருகசங்கரி ஆகியோருடன் மதுரையில் வசித்து வந்த லியோ பிரபு, தன்னுடைய 90வது வயதில், நேற்று மாலை 4 மணி அளவில் காலமானார். இவரது மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவரது இறுதி சடங்குகள் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்று, கீரைத்துறையில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.