மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா இணைந்து நடித்த அனிமல் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூரின் மாறுபட்ட நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்த அதே வேளையில் ராஷ்மிகாவின் நடிப்புக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
அதே சமயம் ராஷ்மிகா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்கிற சர்ச்சைகளும் படம் வெளியான போது எழுந்ததால் படம் ரிலீசுக்கு பிறகு ராஷ்மிகா மிகப்பெரிய அளவில் இந்த படம் பற்றியும் தனது கதாபாத்திரம் பற்றியும் எங்கேயும் பேசவில்லை. அதே சமயம் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திரிப்தி டிம்ரி தினசரி ஒரு பேட்டி கொடுத்து அதன் மூலம் தன்னை புரமோட் செய்து வருகிறார்.
குறிப்பாக இந்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவின் பெயரையே இருட்டடிப்பு செய்யும் விதமாக பரபரப்பான பிரமோஷனில் இருக்கிறார் திரிப்தி டிம்ரி. இந்த தகவலை தனது பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் அனிமல் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டியின் சகோதரருமான பிரணாய் ரெட்டி.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் ராஷ்மிகாவின் பங்களிப்பு மிக அபரிமிதமானது. நடிப்பிலும் ரன்பீர் கபூருக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார். அதேபோல நடிகை திரிப்தி டிம்ரியும் தனது பணியை சிறப்பாக செய்திருந்தார்.. என்றாலும் ராஷ்மிகாவிற்கு செல்ல வேண்டிய பெயரையும் புகழையும் அவர் தனது புத்திசாலித்தனமான புரோமோசன்களால் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் என்றே தெரிகிறது. இந்த படத்திற்காக ராஷ்மிகாவுக்கு சேர வேண்டிய புகழ சரியாக போய் சேரவில்லையே என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.