நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் முடிவடைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி தொடங்கி உள்ளது. இந்த படத்தை 2024 சம்மருக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளனர். ஆனால் பட அறிவிப்பு தவிர வேறு எந்த அப்டேட்டும் இப்படத்திலிருந்து அறிவிக்கவில்லை. ஏன் பட தலைப்பு கூட வெளியாகவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது, கேப்டன் மில்லர் படம் 2024 பொங்கலுக்கு வெளியாவதால் அதற்கு இடையூறாக தனுஷ் 50 படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம். மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அல்லது பொங்கலுக்கு பிறகு தனுஷ் 50 படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிறார்கள்.
கேப்டன் மில்லர் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.