நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் முத்துக்காளை, வடிவேலுவின் குரூப்பில் இணைந்து ஏராளமான படங்களில் காமெடியானாக நடித்துள்ளார். சண்டை கலைஞராக சினிமாவுக்குள் வந்தவர், சண்டைகளில் காமெடியாக நடித்து, பின்னர் காமெடி நடிகராகவே மாறினார். சில படங்களில் சண்டை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
படிப்பின் மீது ஆர்வம் கொண்ட முத்துக்காளை, கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.ஏ. வரலாறு படித்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றார். இந்நிலையில், தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது இவரது மூன்றாவது பட்டமாகும்.
இதுகுறித்து அவர் கூறும்போது “சொந்த ஊர் ராஜபாளையம், சின்ன வயதில் எனக்கு படிப்பை விட காராத்தேவில்தான் ஆர்வம். 18 வயதில் பிளாக் பெல்ட் வாங்கினேன். அப்படியே சினிமா ஆசையில் சென்னை வந்து, சண்டை கலைஞராக பணியாற்றி, சண்டை இயக்குனராகி அப்படியே நடிகராகிவிட்டேன். ஆனால் என் பெற்றோர்களுக்கு நான் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் படிக்கத் தொடங்கினேன். இப்போது 3 பட்டங்களை பெற்றிருக்கிறேன். அடுத்து முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.