இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பாப்புலராக இருந்த செயலி 'டிக் டாக்'. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்த இதனை பயன்படுத்தினர். இது ஒரு கட்டத்தில் எல்லை மீறவே பல நாடுகள் இதனை தடை செய்தன. தமிழ்நாட்டில் டிக் டாக் மூலம் சினிமாவில் நடிகர், நடிகை ஆனவர்கள் நிறைய இருக்கிறார்கள். புதிதாக உருவாகி வரும் படத்திற்கு 'டிக் டாக்' என்றே டைட்டில் வைத்திருக்கிறார்கள்
எம்.கே. என்டர்டெய்ன்ட்மெண்ட் நிறுவனம் சார்பில் மதன் குமார் தயாரிக்கிறார். இதில் ராஜாஜி நாயகனாகவும், சுஷ்மா ராஜேந்திரா நாயகியாகவும், பிரியங்கா அருண் மோகன் இன்னொரு நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் முருகானந்தம், சாம்ஸ், நமோ நாராயணா , வினோதினி, சஞ்சனா சிங், மது சூதனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். டோனி செயின் மற்றும் முருகன் செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவு செய்கிறார்கள், ரொசாரியா இசை அமைக்கிறார். பிரபு சதீஷ் இயக்குகிறார்.