ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். அதையடுத்து ஷாருக்கான் - விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்கப் போவதாக கூறிவந்தார். தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இடத்தில் அவர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தமிழில் விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் அட்லி. இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கிய அட்லி தற்போது அங்கே ரூ.40 கோடி மதிப்பில் அலுவலகம் ஒன்றை வாங்கி உள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் படங்கள் இயக்குவது, தயாரிப்பது என்று ஈடுபடப் போவதால் இப்படி புதிய அலுவலகம் திறந்திருக்கும் அட்லி, அடுத்து ஷாருக்கான் மட்டுமின்றி பாலிவுட்டில் பிரபலமாக உள்ள இன்னும் சில ஹீரோக்களிடத்திலும் கால்ஷீட் வாங்கி அடுத்தடுத்து ஹிந்தியில் படங்கள் இயக்குவதற்கும் திட்டமிட்டிருக்கிறாராம்.