நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஒவ்வொரு வருடமும் சில குறிப்பிட்ட நாட்கள்தான் திரைப்பட வெளியீட்டிற்கான மிகப் பொருத்தமான நாட்களாக இருக்கும். பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, கோடை விடுமுறை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகியவற்றின் போது விடுமுறை நாட்கள் இருக்கும். இப்போது வெளியாகும் எந்தப் படமாக இருந்தாலும் நான்கைந்து நாட்கள் மட்டுமே அதன் அதிகபட்ச வசூல் என்பதால் இந்த விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொள்ள திரையுலகினர் நினைப்பார்கள்.
ஆனால், இந்த வருட கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்த் திரையுலகம் தவறிவிட்டது. டப்பிங் படங்களான 'சலார்' மற்றும் 'டங்கி' ஆகிய படங்களுக்கு வழிவிட்டு முன்னணி நடிகர்கள் ஒதுங்கிவிட்டார்கள்.
தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தை முதலில் டிசம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து பின் பொங்கல் வெளியீடு என மாற்றிவிட்டார்கள். 'அயலான்' படத்தை தீபாவளி வெளியீடு என அறிவித்து பின் பொங்கல் வெளியீடு என அறிவித்தார்கள். அவற்றுடன் 'லால் சலாம்' படமும் பொங்கலுக்குப் போட்டியிட உள்ளது. இப்போது பொங்கல் போட்டியிலிருந்தும் 'லால் சலாம்' விலகலாம் என்ற செய்தி பரவி வருகிறது.
இந்தப் படங்களில் ஏதாவது ஒரு படத்தை இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டிருந்தால் பெரிய போட்டிகள் இல்லாமல் வசூலைப் பார்த்திருக்கலாம். பொங்கல் வரையிலும் அடுத்த சில வாரங்களுக்கு தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் தியேட்டர்காரர்கள் நிலமைதான் திண்டாட்டமாக உள்ளது.