நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து தயாரித்து நேற்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் 'டங்கி'. இதில் டாப்சி, விக்கி கவுசல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் இது ராஜ்குமார் ஹிராணி படமாக தான் எதிர்பார்த்தனர். ஷாரூக்கான் படமாக இல்லை.
இந்த படம் தற்போது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பது தான் விமர்சனமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 58 கோடி எட்டியதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இதற்கு முன்பு ஷாருக்கான் நடித்து வெளிவந்த பதான், ஜவான் படங்களில் வசூலைக் விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.