'தி ஸ்மைல் மேன்' மூலம் திரும்பி வந்த சிஜா ரோஸ் | 2024ன் கடைசி வாரம்… 10 படங்கள் ரிலீஸ் | 'கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல் | 'டேபிள் பிராபிட்' பார்த்த விக்ரமின் ‛வீர தீர சூரன்' | தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகுமா? | 2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை |
1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் உடல் பாதிப்பு அடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது ரயில்வே ஊழியர்கள் சிலர் சாதுர்யமாக செயல்பட்டதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட்டனர். உயிரை துச்சமாக நினைத்து செயல்பட்ட அந்த ரயில்வே ஊழியர்களை பற்றி உருவாகி உள்ள தொடர் 'தி ரெயில்வே மேன்'.
இந்த தொடரில் மாதவன், கே.கே.மேனன் திவ்யேந்து சர்மா, பபில்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷிவ் ராவில் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம் தயாரித்துள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. தற்போது நாளை மறுநாள் (18ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால் விஷ வாயு கசிவில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த தொடர் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.