ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
சல்மான்கான், கத்ரினா கைப் நடித்த 'டைகர் 3' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இதனால் சல்மான் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள். இதன் உச்சபட்சமாக மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற ஊரில் படம் தொடங்கியதும் தியேட்டருக்குள் சரமாரியாக பட்டாசை கொழுத்தினார்கள்.
இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்கள். பெண்கள் உள்ளிட்ட சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்கள். தியேட்டர் முழுவதும் புகை மூட்டத்தால் சிலருக்கு மூச்சு திணறியது. இதனால் அந்த காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை பார்த்து ரசியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.